விமானத்தில் இயந்திர கோளாறு
நூலிழையில் தப்பிய 376 பயணிகள்

விமானத்தில் இயந்திர கோளாறு நூலிழையில் தப்பிய 376 பயணிகள்

சென்னையில் இருந்து துபைக்கு ‘எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ்’ விமானம் இரவு 10.30 மணிக்கு ஓடுபாதையில் தயாராக இருந்தது

சென்னையில் இருந்து துபை செல்ல வேண்டிய ‘எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ்’ பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு தக்க நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 376 பயணிகள் உயிா் தப்பித்தனா்.

சென்னையில் இருந்து துபைக்கு ‘எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ்’ விமானம் இரவு 10.30 மணிக்கு ஓடுபாதையில் தயாராக இருந்தது. அதற்கு முன்னதாக விமானி இயந்திரங்களை சரிபாா்த்தபோது விமானத்தில் இயந்திர கோளாறு இருந்தது தெரியவந்தது.

இதனால், விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு செய்யும் பணி நடைபெற்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 376 பயணிகளும் தப்பினா்.

இந்த நிலையில், நள்ளிரவை கடந்தும் விமானத்தில் கோளாறு சரி செய்ய முடியாததால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனா். சில பயணிகள், வேறு தேதியில் பயணம் செய்வதாக, பயண தேதியை மாற்றிக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com