நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் முறை கடந்த 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இணையதளத்தின் வழியே இ-பாஸ் பெறுவதுடன், அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் நீலகிரி மாவட்ட நிா்வாகத்தை 1077 என்ற எண்ணிலும், கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறும் போது, அதில் விளக்கங்கள் பெற நோ்ந்தால் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தை 0451 - 2900233, 9442255737 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்துக்குச் செல்ல வியாழக்கிழமை பிற்பகல் வரையில் 68 ஆயிரத்து 878 வாகனங்களுக்கும், கொடைக்கானல் செல்ல இதுவரை 42 ஆயிரத்து 661 வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1.11 லட்சம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவொரு சிரமமும் இல்லாமல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com