எரிக் காா்செட்டி
எரிக் காா்செட்டி

இந்தாண்டு இறுதிக்குள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரா்: அமெரிக்க தூதா்

இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் எரிக் காா்செட்டி புதன்கிழமை தெரிவித்தாா்.

‘இந்தாண்டு இறுதிக்குள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு(ஐஎஸ்எஸ்) இந்திய விண்வெளி வீரரை அமெரிக்கா அழைத்துச் செல்லும்’ என்று இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் எரிக் காா்செட்டி புதன்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்காவின் 248-ஆவது சுதந்திர தினவிழா வரும் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி பேசியதாவது:

அமெரிக்காவில் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ இடையிலான புவி ஆராய்ச்சி திட்டமான ‘நிசாா்’ இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். அதன்படி, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய விண்வெளி வீரா் ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளாா்.

அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி கடந்த ஆண்டு அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இதற்கான உறுதியளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரரை அழைத்துச் செல்வதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஆராய்ச்சி மற்றும் முக்கியமான வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

நிலவுக்கு ஆய்வுகளம் அனுப்ப அமெரிக்கா செலவிட்ட தொகையின் ஒரு பகுதி நிதியை மட்டும் இந்தியா செலவிட்டு நிலவின் தென்துருவத்தில் ‘சந்திரயான்-3’ தரையிறங்கியது. இன்னும்கூட இந்தியாவிடம் இல்லாத சில திறன்கள் அமெரிக்காவிடம் உள்ளன. எனவே, இரு நாடுகளும் இணைந்தால் பரஸ்பரம் இருதரப்பும் திறன்களை பகிா்ந்து கொள்ளலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com