சூர்யா நடித்த பேரழகன் பட இயக்குநர் மரணம்!

சூர்யா, ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை இயக்கிய சசி சங்கர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 57.
சூர்யா நடித்த பேரழகன் பட இயக்குநர் மரணம்!

சூர்யா, ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை இயக்கிய சசி சங்கர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 57.

சசி சசிங்கர், எர்ணாகுளம் அருகில் உள்ள கோலஞ்சி என்கிற பகுதியில் வசித்து வந்தார். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. புதன்கிழமை வீட்டில் மயங்கிக் கிடந்த நிலையில் இருந்த அவர் உடனடியாக கொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சசி சங்கருக்கு ஒரு மகன், மகள் உண்டு.

1993- முதல் படத்தை இயக்கிய சசி சங்கர், மலையாளம் - தமிழ் என 11 படங்களை இயக்கியுள்ளார். அவருடைய முதல் படமான Narayam, தேசிய விருது வாங்கியது. 2005ல் அவர் கடைசியாக சர்கார் தாதா என்கிற படத்தை இயக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com