விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நான் ஒரு சினிமாவைத் தாண்டி நடிப்பேன் என நினைத்ததே இல்லை: ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். 

News image
Updated On :26 ஜூலை 2022, 12:18 pm

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவைப் பகிர்ந்து பிசிஒஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியதாவது: 

அற்புதமான 13 வருடங்கள்- நான் ஒரு சினிமாவைத் தாண்டி நடிப்பேன் என நினைத்ததே இல்லை. நான் இதற்காகவும் பிறக்கவில்லை. நான் கற்றுக்கொள்ள விரும்பி சினிமாவை கற்றுக்கொண்டேன். சினிமாதான் என் வாழ்க்கையில்  மகிழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம். உண்மையில் சினிமாதான் எனக்கு வாழ்க்கையை அளித்தது. அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

இத்தனை வருடங்களாக நான் கற்றுக்கொண்டது ஏராளம். வெற்றி தோல்விகளின் போது எப்படி தைரியமாக இருக்க வேண்டும் எனவும் பெண்களைப் பற்றிய கதைகளை சொல்ல வேண்டுமெனவும் விரும்பினேன். எனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கும் அன்பிற்கும் மனார்ந்த நன்றி. 

சினிமா எனும் கலையின் மூலம் உங்களை மேலும் அன்பில் விழவைப்பதற்கு முயற்சி செய்வேன்.

பின்குறிப்பு: வித்தியாசமானவர்கள் வெளிப்படையாக வித்தியாசமானவர் ஆகவே இருக்க வேண்டும். அது இறுதியில் பலன் தரும்! இந்த 13 ஆண்டுகளுக்கு நன்றி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.