மாளவிகா மோகனனை வெட்கப்பட செய்த ரசிகர்!

ரசிகரின் புத்தக பரிந்துரையும் மாளவிகாவின் பதிலும்!
மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் ‘பேட்ட’, ‘மாறன்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

திரையில் எப்படியோ. ஆனால் சமூக வலைத்தளங்களில் மாளவிகாவை பின்பற்றுபவர்களுக்கு அவர் ஒரு புத்தக விரும்பி என்பது தெரிந்திருக்கலாம். அவ்வவ்போது பயணங்களில், ஓய்வு நேரங்களில் அவர் வாசிக்கும் புத்தகத்தை குறித்து பகிர்வார்.

புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்களிடம் ‘உங்களுக்கு பிடித்த புனைவு புத்தகத்தை பரிந்துரைங்கள்’ எனக் கேட்டுள்ளார்.

அதற்கு தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வந்த பதில்களில் சிலவற்றை தனது ஸ்டோரியில் மாளவிகா பகிர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

‘எ விசார்ட் ஆப் எர்த்சீ’, ‘த ஸ்பாரோ’, ‘வேர் த க்ரோடாட் சிங்’, முரகாமியின் ‘காப்கா ஆன் த சோர்’, எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதி ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல் ‘ஒளரங்கசீப்’ ஆகிய புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதாக பட்டியலிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த பதிவில் அவரது ஒரு ரசிகர், “மாளவிகா மதிப்புக்குரிய புத்தகம்” என பதில் அனுப்பியதை ஸ்டோரியில் வைத்துள்ளார்.

தற்போது அவர் படித்து கொண்டிருக்கிற புத்தகத்தை முகத்தில் கவிழ்த்தி ஒரு புகைப்படத்தை மாளவிகா பதிலுடன் பகிர்ந்துள்ளார்.

இவர் நடிப்பில் ‘தங்கலான்’ படம் இந்தாண்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா மோகனின் இன்ஸ்டா ஸ்டோரி
மாளவிகா மோகனின் இன்ஸ்டா ஸ்டோரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com