அல்லல்படும் அரசு ஊழியர்

பணியாளர் நியமனம் என்பது நவீன மேலாண்மையில் ஒரு முக்கியமான கூறாகும். அதனால் தான் இத்துறையை மனித வளம் (Human Resources) என்று நவீன மேலாண்மையில் கூறுகின்றனர்.

பணியாளர் நியமனம் என்பது நவீன மேலாண்மையில் ஒரு முக்கியமான கூறாகும். அதனால் தான் இத்துறையை மனித வளம் (Human Resources) என்று நவீன மேலாண்மையில் கூறுகின்றனர். தேவையான பணியாளர் இல்லாமல் எந்த ஒரு அமைப்பும் சரியாக திறம்பட இயங்காது.
அரசு அலுவலர்களின் திறமைக்கும் மற்றும் அவர்களது உழைப்புக்கும் ஒரு எல்லை உண்டு. பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரிடம் ஒப்படைத்து அவரை பொறுப்பாக்குவது இயற்கை நியதிக்கு அப்பாற்பட்டது.
உதாரணமாக 2005-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது தகவல் அலுவலர்கள் என்று சில அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர்கள் யாரென்று பார்த்தால் ஏற்கனவே பதவியில் இருக்கும் அலுவலர்களே ஆவர்.
இத்தகைய புதிய பொறுப்புகளால் அவர்களின் பணிச்சுமை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மனஉளைச்சல் ஏற்பட்டு பல்வேறு வகையான நோய் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றனர்.
அரசு ஊழியம் என்று ஆசைப்பட்டு சேர்ந்து பின்னர் இன்னல்களுக்கு ஆளாகி, அவ்வின்னல்களை தங்கள் குடும்பத்திற்காக தனக்குள் விழுங்கி, விழுங்கி கடைசியில் விழுந்துவிடுகின்றனர்.
கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் போது அதற்கான கூடுதல் ஊதியமும் வழங்குவது தானே நியாயம். ஆனால் அவ்வாறு வழங்கப்படுகிறதா?
ஒரு சட்டத்தையோ அல்லது திட்டத்தையோ நிறைவேற்றும் முன்பு அதனை செயல்படுத்த எத்தனை பணியாளர்கள் தேவைப்படுவர், என்னென்ன உபகரணங்கள் தேவைப்படும் போன்ற அடிப்படை விஷயங்களைக்கூட ஆராயாமல் திட்டங்களை அறிவித்துவிடுகின்றனர்.
அத்தியாவசிய பணிகளாகிய மின்சாரம், மருத்துவம், காவல் போன்றவற்றில் ஆட்கள் பற்றாக்குறையால் அத்துறை ஊழியர்கள் படும் அவதிகளுக்கு அளவே இல்லை.
அதிலும் குறிப்பாக காவல் துறையினர் நாட்கணக்கிலும், மாதக்கணக்கிலும் தங்களுடைய குடும்பத்தை பிரிந்து தங்கள் பணியிடங்களில் தங்கி பணியாற்றுகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படாத சூழ்நிலை நிலவுவதை பார்கிறோம்.
மேலும் அரசு ஊழியர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்துவது "சிவப்பு நாடா' என்று சொல்லப்படும் காலந்தாழ்த்தும் நடை முறையாகும்.
பல அரசு அலுவலகங்களில் குண்டூசி வாங்க வேண்டும் என்றால் கூட பல அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் வாங்குவர். ஆனால் அதற்குத் தேவையான பிரிண்டர் வாங்க அனுமதி கிடையாது.
அனுமதி பெற்று பிரிண்டர் வாங்கும் போது கம்ப்யூட்டர் பழையதாகி பழுதாகியிருக்கும். இரு பொருட்களுமே பயன்படாது.
அரசியல்வாதிகள் வழங்கும் வாய்மொழி உத்தரவுகளைவேறு செயல்படுத்த வேண்டும். அதை செயல்படுத்தாவிட்டால் பணியிடமாற்றம் போன்ற தொந்தரவுகள் வந்துசேரும், செயல்படுத்தினால் சட்டவிதி மீறல் போன்ற சட்டரீதியான நடவடிக்கைகள்.
நன்னடைத்தை விதி என்ற பெயரில் பல்வேறு கடிவாளங்கள். பணிச்சுமைக்கு ஏற்றவாறு பணச்சுமை கிடைக்காததால் பலரும் கையூட்டுக்காக கைநீட்டுவது என்ற அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அரசு ஊழியர்களின் செலவுக் கணக்கில் பெரும்பங்கு வகிப்பது அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவாகும். தரமான கல்விக்காக தங்களின் வருமானம் போதாத நிலையில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தங்களின் உறவினர்களிடம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொந்த வீடு, கார், நகைகள் என்று அகல கால்வைத்து அகப்பட்டுக்கொண்டு அதை சரிசெய்ய முடியாமல் லஞ்சம் வாங்கும் நபர்களும் உண்டு.
அத்தியவசிய பொருட்களின் விலை உயரும் விகிதமும் (இர்ள்ற் ர்ச் ஐய்ச்ப்ஹற்ண்ர்ய் ஐய்க்ங்ஷ்), தனி நபர் வருமானம் (டங்ழ் ஸ்ரீஹல்ண்ற்ஹ ஐய்ஸ்ரீர்ம்ங் தஹற்ங்) உயரும் விகிதமும் முரண்பாடாக இருக்கின்றன.
நுகர்வு கலாசாரத்திற்கு ஆட்பட்டு தேவையற்ற பொருட்களை, கெளரவம் என்ற பெயரில் வாங்கி வைத்துக்கொண்டு அல்லல்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால் அரசு ஊழியர்களுக்குத்தான் அடிக்கடி ஊதிய உயர்வு வழங்கப்படுகிறதே என்ற கேள்வி எழலாம். சுயதொழில் செய்பவர்களுக்கும், அன்றாடம் கூலிக்கு செல்பவர்களுக்கும் இருக்கும் சுதந்திரம் இவர்களுக்கு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
இவற்றுக்குத் தீர்வுதான் என்ன? தேவையான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, யோகா, தியானம் போன்ற உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய பயிற்சிகளை வாராந்தோறும் தருவது, பல்வேறுபட்ட பணிகளில் ஈடுபடுத்தாமல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்யுமாறு பணிப்பது ஆகியவையே.
மேலும் புதிய திட்டங்களை கொண்டுவரும்முன் அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான ஆட்களை நியமனம் செய்வது, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட அலுவலகங்களை உருவாக்கித் தருவது, பணிக்கு வருவதை சுமையாகக் கருதாமல் சுகமாக கருதும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்குவது, சிவப்பு நாடா முறையை முற்றிலும் ஒழிப்பது போன்ற நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமான சீர்திருத்தங்களாகும்.
மேற்கண்ட காரணிகளே லஞ்சத்தையும், நிர்வாக சீர்கேட்டையும் உருவாக்கி அரசு இயந்திரத்தை பாழ்படுத்துகின்றன. இயந்திரத்தை சரிசெய்ய ஆவணச் செய்யுமா அரசு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com