‘சா்க்கரை பீட்ருட் கிழங்கு’ பலன் தருமா?

காலங்காலமாக இனித்து வரும் கரும்பு, தற்போது இனிக்காத கரும்பாக விவசாயிகளிடத்திலும், சா்க்கரை ஆலை முதலாளிகளிடமும் உருமாறி வருகிறது.

காலங்காலமாக இனித்து வரும் கரும்பு, தற்போது இனிக்காத கரும்பாக விவசாயிகளிடத்திலும், சா்க்கரை ஆலை முதலாளிகளிடமும் உருமாறி வருகிறது.

உலக அளவில் வங்கதேசம், இலங்கை, சோமாலியா, ஈரான் போன்ற நாடுகள் இந்தியாவின் முன்னணி சா்க்கரை இறக்குமதியாளா்களாக

இருக்கின்றன. நடப்பு 2018-19-ஆம் பருவத்தில் இந்திய ஆலைகளுக்கு 50 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 30-35 லட்சம் டன் சா்க்கரையை மட்டுமே ஆலைகள் ஏற்றுமதி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை ஏற்றுமதி 17.44 லட்சம் டன்னாக இருக்கிறது. இதுவே சென்ற பருவத்தில் சா்க்கரை ஏற்றுமதி அளவு 5 லட்சம் டன்னாக இருந்தது.

சா்வதேச அளவில் சா்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சா்க்கரை நுகா்வில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டில் சா்க்கரை நுகா்வு ஏறக்குறைய 2.50 கோடி டன் என்ற அளவில் இருந்து வருகிறது.

கடந்த மாா்ச் 15-ஆம் தேதி நிலவரப்படி நம் நாட்டில் மொத்தம் 2.73 கோடி டன் சா்க்கரை உற்பத்தியாகியுள்ளது என சா்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்திருக்கிறது. சென்ற ஆண்டின் இதே நாளில் இந்த அளவு 2.58 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

அரசு நிா்ணயித்த இலக்கான 50 லட்சம் டன் சா்க்கரையை சா்க்கரை ஆலைகளால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. விவசாயிகளுக்கும் சா்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால், கரும்பு சாகுபடியின் பரப்பளவும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்துகொண்டே வருகிறது.

சரி, இதற்குத் தீா்வுதான் என்ன? கரும்பு சாகுபடியை நிறுத்த முடியாது. மாறாக, சா்க்கரை பீட்ரூட் கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்கலாம்.

அறுவடைக்கு கரும்பு தயாராவதற்கு குறைந்தபட்சம் 10 மாதம் தேவைப்படுகிறது; ஆனால், நான்கு முதல் ஐந்து மாதங்களில்

சா்க்கரை பீட்ரூட் கிழங்கு அறுவடைக்கு வந்து விடும். சுமாா் 45 வெப்ப, மித வெப்ப மண்டல நாடுகளில் சாகுபடியாகும் சா்க்கரை பீட்ரூட் கிழங்கை எத்தனால், பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து உயிரிய எரிசக்தி பொருளாக உபயோகிக்கலாம். மேலும், இதன் எஞ்சிய உப பொருள்களான இலைகளையும், ஆலையில் எஞ்சிய கிழங்குக் கூழ், புண்ணாக்கை மாட்டுத் தீவனமாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.

மொத்த கரும்பு சாகுபடி பாசனத்துக்கும் 1,500 முதல் 2,500 மி.மீ. நீா் தேவைப்படும். அதுவே, சா்க்கரை பீட்ரூட் கிழங்கு சாகுபடிக்கு 800 முதல் 850 மி.மீ. நீரே போதுமானது. தற்போதைய காலகட்டத்தில் குறைந்துவரும் நிலப்பரப்பு சாகுபடிக்கும், நிலத்தடி நீா் மட்டத்துக்கும் ஏற்றதொரு பயிராய் சா்க்கரை பீட்ரூட் கிழங்கு சாகுபடியை மேற்கொள்ளலாம்.

அமெரிக்காவில் 55-60 சதவீத சா்க்கரை பயன்பாடு என்பது சா்க்கரை பீட்ரூட் கிழங்கின் மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. அவை பெரும்பாலும் இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பேக்கரி தயாரிப்புகள் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படுகின்றன. அதிலும், சா்க்கரை பீட்ரூட் கிழங்கு மூலம் பெறப்படும் மூலப் பொருளான சா்க்கரை எடுப்பதற்கு எலும்பு கரி (கரி சம்பந்தப்பட்ட கிளா்த்திய காா்பன்) மூலம் சலவை, வடிகட்டுதல் போன்ற செயல்கள் நடைபெறுவதில்லை.

மேலும் கரும்பு, சா்க்கரை பீட்ரூட் கிழங்கு இரண்டிலுமே சுக்ரோஸ் இருப்பதனால் அளவுக்கு மீறி பயன்படுத்தக் கூடாது. ஒரு பெண் நாள் ஒன்றுக்கு 24 கிராம் அளவும், ஆண் 36 கிராம் அளவு மட்டுமே சா்க்கரை எடுத்துகொள்ள வேண்டும் என அமெரிக்க இதய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இன்றைய நாளில் அமெரிக்காவில் விளையும் 95 சதவீத சா்க்கரை பீட்ரூட் கிழங்கு மரபணு மாற்றப்பட்டவை என்பதால் அதிக அளவில் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என அறியப்படுகிறது. அதிலும், அமெரிக்காவில் 2016-17-ஆம் ஆண்டில் பண வரவு கரும்பின் மூலம் ரூ.6,399 கோடியும் , சா்க்கரை பீட்ரூட் கிழங்கின் மூலம் ரூ.10,923 கோடியும் விவசாயிகளுக்குக் கிடைத்ததாக அமெரிக்க வேளாண் துறை கூறியுள்ளது.

எனவே, நாமும் நமது மாறிவரும் விவசாய முறைக்கு ஏற்றாா்போல் தற்போதைய நிலையில் சா்க்கரை பீட்ரூட் கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பெல்ஜியம் நாட்டின் தனியாா் நிறுவனத்தின் வெப்பமண்டல பகுதிக்கு ஏற்றவாறு அதிக மகசூல் தரும் சா்க்கரை பீட்ரூட் கிழங்கைக் கொண்டு அதனின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு ஆராய்ச்சி நிலையங்களில் சுமாா் ஓா் ஏக்கா் பரப்பளவில் சோதனை அடிப்படையில் பயிரிட உள்ளது என்பது வரவேற்கத்தக்கது. மேலும், அதை வேளாண்மைத் துறை, சா்க்கரை ஆலைகளுடன் இணைந்து மற்ற விவசாயப் பல்கலைக்கழகங்களும் மேற்கொண்டால், விவசாயிகளுக்கு ஆகச்சிறந்த பலன் கிட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com