சிறுமலர் சிறப்புப் பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி

சென்னை அண்ணா சாலையில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறுமலர் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளிமாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை அண்ணாசாலையிலுள்ள செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சிறுமலர் பள்ளி மாணவிகளுடன் அவர்களது தாயார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை அண்ணாசாலையிலுள்ள செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சிறுமலர் பள்ளி மாணவிகளுடன் அவர்களது தாயார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறுமலர் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளிமாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த மதிப்பெண் 400: செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வு விலக்கு அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், பத்தாம் வகுப்பில் இத்தைகய மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 400-ஆக உள்ளது.
பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளின் பெற்றோர் கூறிய கருத்து:
மாணவி திலகவதி - 400-க்கு 370--பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் தாய் கற்பகம்(இல்லத்தரசி): எனது கணவர் ஓட்டுநர்; சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், எனது மகளுக்கு இத்தகைய குறைபாடு உள்ளது 2 வயதில்தான் தெரியவந்தது.
கிராமப்புறங்களில் சிறப்புப் பள்ளிகள் இல்லாததால் என் குழந்தையைப் படிக்கவைப்பதற்காகவே சென்னைக்கு இடம்பெயர்ந்தோம். நான்கு வயதில் சிறுமலர் பள்ளியில் எல்.கே.ஜி-யில் சேர்த்தோம்.
தற்போது எனது மகள் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது மிகவும் நெகழ்ச்சியாக உள்ளது. யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக பேருந்து ஏறி பள்ளிக்குச் சென்று வருவாள். அவள் அரசு வேலைக்குச் சென்று மற்றவர்கள் போல் பணியாற்ற வேண்டும். எங்களை யாரும் படிக்க வைக்கவில்லை. அந்தக் குறையை எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை என்றார்.
மாணவி ஜெயஸ்ரீ-400-க்கு 362-அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் தாய் சசிகலா: எனது மகளுக்கு இடது கண்ணில் சரியான பார்வைத்திறன் இல்லை. எனினும் அவற்றை பெரும் குறையாகக் கருதாமல் மிகச் சிறப்பாக படித்து நிறைய மதிப்பெண் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவி பார்கவி-400-க்கு 353- அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் தாயார் ராஜேஸ்வரி: செவித்திறன் குறைபாடு குறித்து ஒன்றரை வயதில் தெரிய வந்தது. தற்போது நல்ல மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அக்கவுண்ட்ஸ் பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க உள்ளார் பார்கவி.
ஜெசிந்தா ரோசலிந்த் - சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை: சிறுமலர் பெண்கள் பள்ளியில் மொத்தம் 19 பேர் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்று மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் வழியில் படித்த இவர்கள் இந்த அளவுக்கு அதிக மதிப்பெண் பெற காரணமாக இருந்த ஆசிரியைகளுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com