பட்டப்படிப்பு படித்துவிட்டு... அதற்கும் மேலே என்ன படிப்பது? என்று யோசிக்கிறீர்களா நீங்கள்?

பட்டப்படிப்பு படித்துவிட்டீர்கள். அதற்கும் மேலே என்ன படிப்பது? என்று யோசிக்கிறீர்களா? நிறைய வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புதான்
பட்டப்படிப்பு படித்துவிட்டு... அதற்கும் மேலே என்ன படிப்பது? என்று யோசிக்கிறீர்களா நீங்கள்?

பட்டப்படிப்பு படித்துவிட்டீர்கள். அதற்கும் மேலே என்ன படிப்பது? என்று யோசிக்கிறீர்களா? நிறைய வேலை வாய்ப்பு வழங்கும் படிப்புதான் chartered
wealth manager- R Programme (CWM-R).

இந்தப் படிப்பு படித்தவர்கள் சார்ட்டர்ட் வெல்த் மேனேஜர்களாக பணிபுரியலாம். சார்ட்டர்ட் வெல்த் மேனேஜர்கள் எங்கே தேவைப்படுகிறார்கள்?
நம் நாட்டில் கடந்த ஆண்டு வரை தோராயமாக 2.36 லட்சம் கோடீஸ்வரர்களும் (High Networth Individuals-HNI), 1.46 லட்சம் பெருங்கோடீஸ்வரர்களும் (Ultra HNI) உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் 2025-இல் சுமார் 6 லட்சத்தைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்களைப் போன்ற பலருக்கும் பணம், நிலம், தொழிற்சாலைகள், எஸ்டேட்ஸ், வங்கிக் கணக்கு, வணிகம் போன்ற செல்வங்களை நிர்வகிப்பதற்கான ஆலோசனை வழங்க சார்டர்டர்ட் வெல்த் மேனேஜர்(CWM-R) தேவைப்படுகின்றனர். ஆனால், இன்றைய நிலையில், நிதி திட்டமிடுதலில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் தேவை என்ற நிலையில், இப்போது சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. மேலும், நிதி ஆலோசகர், நிதி திட்டமிடுநர்களைக் காட்டிலும் அதிகத் திறன் கொண்டவர்களாகக் கருதப்படும் சார்ட்டர்ட் வெல்த் மேனேஜர்களுக்கு கோடீஸ்வர நிறுவனங்கள், வங்கி அமைப்புகளில் முன்னுரிமை அளித்து வேலை வழங்கப்படுகிறது.

இந்தப் படிப்பை எப்படிப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்படும் "தி அமெரிக்கன் அகாதெமி ஆப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட்' என்ற அமைப்பு நிதி சார்ந்த பயிற்சிகளை அளித்து தேர்வு நடத்தி வெற்றி பெறுவோருக்கு சர்வதேச தரச் சான்றிதழை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமாகக் கருதப்படுவது CWM-R    திட்டமாகும்.

அமெரிக்கன் அகாதெமி ஆப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட் (இந்தியா) அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி மையங்கள் மூலம் இந்தியாவின் பல நகரங்களில் இந்தத் திட்டத்தை அளிக்கிறது. அந்த மையங்கள் மூலம் அமெரிக்கன் அகாதெமியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பதிவுசெய்து கொண்டு பகுதிநேரமாக தொலைநிலைக் கல்வி, வகுப்பறைக் கல்வி, இணையவழிக் கல்வி மூலம் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறலாம்.

CWM திட்டத்தில் 2 நிலைத் தேர்வுகள் உள்ளன. முதல்நிலை என்பது ஃபவுன்டேசன் கோர்ஸ் என்றும், 2-ஆவது நிலை அட்வான்ஸ்டு வெல்த் மேனேஜ்மென்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 2 நிலைகளிலும் தேர்ச்சிபெற குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படலாம்.

இதற்கான அமெரிக்கன் அகாதெமியின் பதிவுக் கட்டணம் - சேவை வரியையும் சேர்த்து ரூ. 11,500. கோர்ஸ் கட்டணமாக ரூ. 6,900, தேர்வுக் கட்டணமாக 2 நிலைக்கும் சேர்த்து ரூ. 6,900, சான்றிதழ் கட்டணமாக சுமார் ரூ. 7000 செலுத்த வேண்டும். இவற்றை அகாதெமியின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி மையங்கள் மூலம் செலுத்தலாம். இதோடு, அந்த கல்வி மையத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பயிற்சி முறைக்கு ஏற்ப தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து தோராயமாக ரூ. 45-50 ஆயிரம் வரை தேவைப்படலாம்.

அகாதெமியில் பதிவு செய்த ஓராண்டுக்குள் தேர்வு எழுதாவிட்டால், மீண்டும் ரூ. 5750 செலுத்தி பதிவைப் புதுப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வை இந்தியாவில்  75 நகரங்களில் எழுதலாம். பிளஸ் 2 முடித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அவர்கள் பட்டப் படிப்பை முடித்த பிறகே இந்தத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தத் தேர்வை B.Com, BMS, BBI,BAF, BFM, M.Com  முடித்தவர்கள் சற்று எளிதாக எதிர்கொள்ளலாம். அதேநேரத்தில் நிதி தொடர்பான வேலைவாய்ப்பை விரும்பும் மற்ற பட்டதாரிகள், MBA, CA, CA Inter முடித்தவர்கள், வங்கி துறை, நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோரும் இந்தத் தேர்வை எழுதி சான்றிதழ் பெறலாம்.

CWM சான்றிதழ் என்பது உலக தரத்துக்கான சர்வதேச அளவில் மிக உயர்ந்த, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விருது ஆகும். இது உலகின் 150 நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது.

நம்மைப் பொருத்த அளவில், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் கீழ் (செபி) இயங்கும், தேசிய பங்குச் சந்தை கழகத்தின் முதலீட்டு ஆலோசகர் ஒழுங்கமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்கன் அகாதெமி ஆப் ஃபினான்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பில் சர்வதேச அளவில் உறுப்பினர்களாக உள்ள பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் CWM சான்றிதழ் பெற்றவர்களுக்கு தங்கள் நிறுவன வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன. முன்னதாக, இந்தத் திட்டத்தில் சர்வதேச நிதி அமைப்புகள், அந்த நாடுகளின் வரிச் சட்டங்கள் குறித்து ஆழமான பயிற்சி பெறுவதால், நாம் சர்வதேச அளவில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் சார்ட்டர்ட் வெல்த் மேனேஜராகப் பணியாற்ற முடியும்.

இந்தச் சான்றிதழ் பெற்ற தொடக்கத்தில் என்ட்ரி லெவலில் உள்ளவர்கள் Executive Asst. Wealth Mgr. பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 3- 6 லட்சம், Intermediate level- இல் உள்ளவர்கள் Sr. Executive Wealth Mgr, Team Leader,  Unit Head, Branch Head பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 4- 8 லட்சம், ஙண்க்க்ப்ங் ப்ங்ஸ்ங்ப்- இல் உள்ளவர்கள் Cluster Zonal, Regional Head, AVPVP Private Banker பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 8-25 லட்சம், Senior level-இல் உள்ளவர்கள் Business Head, Channal Head, Product Head பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 25-50 லட்சம், Top level-இல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பிளஸ் 2 முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள், நிதி சார்ந்த பட்டம் பெற்றவர்கள், நிதித் துறையில் ஆர்வமுள்ள பிற பட்டதாரிகள் என அனைத்து இளைஞர்களும், இந்திய அரசு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தச் சான்றிதழைப் பெறுவதன் மூலம் பெரு நிறுவனங்கள், தனியார் வங்கிகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com