கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளைத் தொடர்ந்து கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் பாடப்பிரிவுகளைத் தொடர்ந்து கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
புதுவையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த முறையில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 
இதில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுர்வேதம் மற்றும் பி.ஏ., எல்.எல்.பி. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடந்த 3-ஆம் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, எம்பிபிஎஸ் படிப்புக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. 
இதற்கிடையே, கடந்த 
5-ஆம் தேதி பி.டெக்., பி.பார்ம், பி.எஸ்.சி. விவசாயம், தோட்டக்கலை மற்றும் உயிரியல் பாடப் பிரிவுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. 
இந்தப் பட்டியலில் மொத்தம் 8,651 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த வரைவு தரவரிசைப் பட்டியல் பிராந்தியங்கள் மற்றும் ஓபிசி, எம்பிசி, எஸ்சி, இபிசி, பிசிஎம் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவிலும் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், முன்னாள் ராணுவத்தினர்) வெளியிடப்பட்டுள்ளது.
பிராந்திய வாரியாக புதுச்சேரியில் 5, 879 பேர், காரைக்காலில் 1,119 பேர், மாஹேவில் 230 பேர், ஏனாமில் 178 பேர் இடம் பெற்றுள்ளனர். 
இட ஒதுக்கீடு வாரியாக ஓபிசி - 2,125 பேர், எம்பிசி - 2,197 பேர், எஸ்சி - 1, 215 பேர், பிசிஎம் - 230 பேர், இபிசி - 260 பேர், பிடி - 22 பேர், எஸ்டி - 4 பேர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு - 23 பேர், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரக் குழந்தைகள் - 59 பேர், மாற்றுத்திறனாளிகள் - 28 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், கிராமப்புற ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 733 பேர் கொண்ட பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் மாணவிகள் பவித்ரா (99.63), இந்திரா பிரியர்திஷினி (99.50), ஸ்நேகா (99.50), அனுப்ரியா (99.50), மாணவர் கோகுலகிருஷ்ணன் (99.38) ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதேபோல, எம்பிசி பிரிவில் பவித்ரா (99.63), ஸ்நேகா (99.50), கோகுலகிருஷ்ணன் (99.38) ஆகியோரும், ஓபிசி பிரிவில் அனுப்ரியா (99.50), விஜயலட்சுமி (99.25), அபிராமி ரவீந்திரன் (99.25) ஆகியோரும், எஸ்சி பிரிவில் இந்திரா பிரியதர்ஷினி (99.50), ஆகாஷ் (98.00), ரம்யா (96.88) ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின் centacug@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். 
மாணவர்கள், பெற்றோர் CENTAC அலுவலகத்துக்கு நேரில் வந்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்
துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com