தொழில்நுட்பக் கோளாறு: ஆன்லைன் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில்  தாமதம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் மூலம் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதமாகும்  நிலை ஏற்பட்டுள்ளது. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் மூலம் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் தாமதமாகும்  நிலை ஏற்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள், உயர் கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேர விரும்புவோருக்கு கையால் எழுதி பள்ளி மாற்றுச்சான்றிதழ் (டிசி)
வழங்கப்பட்டு வந்தது.  இதையடுத்து மே மாதம் முதல் ஆன்லைன் டிசி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைப் பெற பள்ளிகளுக்கான 11 இலக்க யூடிஎஸ்
எண்களைப் பதிவு செய்தால் பள்ளியின் இணையதளம் திறக்கும். அதில் மாணவரின் எமிஸ் எண்ணைப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் முழுவிவரம் பெறலாம். 
இதில் ஒரு நகல் மாணவருக்கும், மற்றொன்று பள்ளியிலும் பாதுகாக்கப்படும். ஒருமுறை ஆன்லைனில் அதனை பதவிறக்கம் செய்தால் அந்த மாணவரின்
விவரங்கள் மீண்டும் துறையின் பொது சர்வருக்கு சென்று விடும். அதன்பின் மாணவர் விவரத்தை மீண்டும் பெறுவதிலும் அல்லது அரசின் சலுகை பெற்றதை
பதிவு செய்யவும் இயலாது. அதில் எந்த திருத்தமும் செய்ய முடியாது. 
   இணையதள வேகம் குறைவாக இருப்பதால் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  ஒரே நாளில் பலருக்கு
மாற்றுச் சான்றிதழ் வழங்க இயலாத நிலை உள்ளதாக பள்ளிகள் புகார் தெரிவித்தன. இந்நிலையில், இந்தக் குறைபாடுகளை சரிசெய்து  புது மென்பொருளை உருவாக்கி மே 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் மாற்றுச் சான்றிதழ் துரிதமாக வழங்கப்படும்  என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com