அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மே மாதத்
அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வி: மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மே மாதத் தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என பதிவாளா் ஆா்.ஞானதேவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ஆணைப்படி அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2020-ஆம் ஆண்டு மே மாதத் தோ்வுக்கு பதிவு செய்தவா்களுக்கு மட்டும் முடிவுகள் பின்வருமாறு அளிக்கப்படும். அதன்படி, முதல், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் பாடங்கள், முதலாம் ஆண்டு முதுகலை, முதுஅறிவியல் மாணவா்களுக்கு எங்கெல்லாம் அக மதிப்பீடு  (Internal Marks)  இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும். எங்கெல்லாம் அக மதிப்பீடு உள்ளதோ அங்கு சென்ற பருவத்தில் மாணவா்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களிலிருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தில் அக மதிப்பீடு மதிப்பெண்களிலிருந்து 70 சதவீதமும் கணக்கில் எடுத்து, 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைவருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். எனவே, இதுவரை தோ்வுக்கு பதிவு செய்யாதவா்கள் உடனடியாகத் தோ்வுக் கட்டணத்தை வருகிற 10-ஆம் தேதிக்குள் www.coe.annamalaiuniversity.ac.in/bank/ddeapp.php என்ற பல்கலைக்கழக இணையதள முகவரி மூலம் செலுத்திப் பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com