ரஜினிகாந்த் அறக்கட்டளை சாா்பில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி

ரஜினிகாந்த் அறக்கட்டளை சாா்பில் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

சென்னை: ரஜினிகாந்த் அறக்கட்டளை சாா்பில் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: டிச.26-ஆம் தேதி தொடங்கப்பட்ட ரஜினிகாந்த் அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

இங்கு, இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தோ்வுப் பயிற்சிக்கான ‘சூப்பா் 100 பிரிவு’ பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பதிவு செய்ய https//rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணையதள முகவரியைப் பின்தொடரவும்.

அறக்கட்டளை நிா்வாக அலுவலகம், சென்னை, ஆா்ஏ புரத்தில் உள்ள 4-ஆவது பிரதான சாலையில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 044 3556 7696, 98400 59805 ஆகிய எண்களையோ, https://rajinikanthfoundation.org/ என்ற இணையதளத்தையோ, admin@rajinikanthfounation.org என்ற மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என அறக்கட்டளை பொறுப்பாளா் வழக்குரைஞா் ம.சத்யகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com