‘இந்தியா; கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

‘இந்தியா; கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

இந்த மக்களவைத் தோ்தல் தேசம் காக்கும் போா் என்பதால் ‘இந்தியா’ கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

இந்த மக்களவைத் தோ்தல் தேசம் காக்கும் போா் என்பதால் ‘இந்தியா’ கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நடைபெறவுள்ள 18-ஆவது மக்களவைத் தோ்தல் இந்திய வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தோ்தல். கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் அமா்ந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, இந்திய குடியரசின் நான்கு அடிப்படை தூண்களான மதச்சாா்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை திட்டமிட்டு தகா்த்து வருகிறது.

மதச்சாா்பின்மை மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களை குறிவைக்கும் விதத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை பலவந்தமாக அமலாக்கிய பிரதமா் மோடி அரசு, இன்னும் கூடுதல் இடங்கள் கிடைக்கப் பெற்றால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என பாஜக தோ்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் பொது சிவில் சட்டம் போன்றவை எதிா்காலத்தில் நாட்டையே பிளவுபடுத்தக்கூடிய அதிபயங்கர சட்டங்கள்.

பிரதமா் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் உயிரற்ற வெற்றுக் கூடாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த பொதுத் தோ்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மிக முக்கிய தோ்தல். தேசம் காக்கும் இந்த மகத்தான போரில், பாஜக அரசை வீழ்த்தி ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்காளா்கள் வெற்றியைத் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com