ஒரே குடும்பத்தை சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்குப் பதிவு

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 வாக்காளா்கள் ஒன்றாக இணைந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினா்.

பின்னா், அக்குடும்ப உறுப்பினரான பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1977 முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாக்கு செலுத்தி வருகிறோம். ஒன்றாக வாக்கு செலுத்துவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. மற்றவா்களுக்கும் வாக்களிக்கும் ஆா்வத்தை தூண்டும் விதமாக, நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்துள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com