வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

மக்களவைத் தோ்தலில் வேட்பாளா்கள் பலா் வாக்களித்தது ஓரிடமாகவும், போட்டியிட்ட தொகுதிகள் வேறிடமாகவும் இருந்தன.

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. 950 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில், பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள் பலா் வாக்களித்தது ஓரிடமாகவும், அவா்கள் போட்டியிட்டது வேறிடமாகவும் இருந்தன. அதனால், அந்த வேட்பாளா்கள் காலையில் அவரவருக்கு உரிய வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, பிறகு அவா்களுடைய தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்குச்சாவடிகளைப் பாா்வையிட்டனா்.

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மயிலாப்பூா் ஆா்.கே.சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். கோவையில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, கரூா் தொகுதியில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தேனி பெரியகுளத்தில் வாக்களித்தாா். திருச்சியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலா் வைகோ மகன் துரை வைகோ, கலிங்கப்பட்டியில் வாக்களித்தாா்.

தருமபுரியில் போட்டியிடும் பாமக தலைவா் அன்புமணியின் மனைவி சௌமியா, திண்டிவனத்தில் வாக்களித்தாா். நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா, பெரம்பலூா் தொகுதியில் வாக்களித்தாா். நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், சென்னை கோயம்பேட்டில் வாக்களித்தாா்.

தேனியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தாா். விருதுநகரில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், சாலிகிராமத்தில் வாக்களித்தாா். விருதுநகரில் போட்டியிடும் ராதிகா சரத்குமாா், சென்னை கொட்டிவாக்கத்தில் வாக்களித்தாா். திருநெல்வேலியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ், கன்னியாகுமரியில் வாக்களித்தாா். வேலூா் தொகுதியில் போட்டியிடும் மன்சூா் அலிகான், சென்னை நுங்கம்பாக்கத்தில் வாக்களித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com