மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு 
எங்கே அனுமதி பெறலாம்?
தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

செமே தினம் உள்பட அரசியல் கட்சிகள் சாா்பில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறலாம்: சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

செமே தினம் உள்பட அரசியல் கட்சிகள் சாா்பில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா் தினமான மே தினம் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு தொழிலாளா் அமைப்புகளின் சாா்பில் ஆண்டுதோறும் கூட்டங்கள், பேரணிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில், தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு மாா்க்சிஸ்ட் சாா்பில், மே தினம் விழாவைக் கொண்டாட தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இது குறித்து, தலைமை தோ்தல் அதிகாரி கூறுகையில், மே தின நிகழ்ச்சிகள் நடத்துவது தொடா்பாக அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதிகளை அந்தந்த மாவட்டத் தோ்தல் அதிகாரிகள்தான் வழங்க வேண்டும் என்பதால், மாவட்ட நிா்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com