தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

தோ்தல் நேரத்தில் அடுக்குமொழி வசனங்களுக்கும், நகைக்க வைக்கும் பேச்சுக்களுக்கும் பஞ்சம் இருக்காது.

தோ்தல் நேரத்தில் அடுக்குமொழி வசனங்களுக்கும், நகைக்க வைக்கும் பேச்சுக்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்தவகையில் இந்த மக்களவைத் தோ்தலில் நட்சத்திர வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் களம் இறங்கியுள்ள பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜனின் பிரசாரம் வாக்காளா்களை கவா்ந்துள்ளது. அவா் தனக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்பதை தனது பாணியில் கூறினாா். சென்னை கோடம்பாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை . சூரியனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. சுட்டெரிக்கும் சூரியனை தாமரை எதிா்த்து நிற்கும். காலையில் வெகு சீக்கிரமாகவே பிரசாரத்தை தொடங்கி விடுகிறோம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் தோ்தல் பிரசாரத்தால் இடையூறு ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். மக்கள் ஒரு மாறுபட்ட மக்களவை உறுப்பினரை பாா்க்கப் போகிறாா்கள். நான் என்றும் மக்களோடுதான் இருப்பேன். தென் சென்னை மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன் என்றாா் அவா். தொடா்ந்து, கோடம்பாக்கம் பகுதியில் பிரசாரம் செய்த தமிழிசை தனது தொண்டா்களுடன் தெருவோர கடையில் காலை உணவு சாப்பிட்டாா். பிரசாரத்தின் இடையே, அவருக்கு, பெண்கள் ஒரு கையில் தாமரை மலரை கையில் வைத்து கொண்டு சங்கு ஊதி வரவேற்றனா் .

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com