பதவி: பதிவாளர்
காலியிடம்: 1
தகுதி: பல்கலைக்கழக பேராசிரியர் நிலைக்கு சமமானவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 45. அதிகபட்ச வயது, கல்வியாளர் அல்லாதவராக இருந்தால் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வியாளராக இருந்தால் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: நூலகர்
காலியிடம்: 1
தகுதி: நூலக அறிவியல்/ தகவல் அறிவியல்/ ஆவணப்படுத்துதல் துறைகளில் முதுகலைப் பட்டத்தில் 55 சதவீதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பல்கலைக்கழக துணை நூலகராக பதின்மூன்று ஆண்டுகள் அல்லது கல்லூரி நூலகராக பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். பி.எச்.டி./ எம்.பில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnou.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய நகல் சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் ரூ.1,000-க்கான வரைவோலையை அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Tamilnadu Open University, No.577, Anna Salai, Saidapet, Chennai-600015.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 31-01-2018 மாலை 5:45 மணி.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnou.ac.in/wp-content/uploads/2016/05/Regr-Paper-Advt.-1.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.