விளையாட்டு வீரர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலை!

இந்திய துணை ராணுவப் படையான எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force(BSF))விளையாட்டு வீரர்களுக்கான காண்ஸ்டபிள் பணியிடங்களுக்கான
விளையாட்டு வீரர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலை!


இந்திய துணை ராணுவப் படையான எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force(BSF))விளையாட்டு வீரர்களுக்கான காண்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட விளையாட்டுகளில் தேதிய அளவில், மாநில அளவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Constable (GD)

காலியிடங்கள்: 63

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Arechery, Aquatic, Athletics, Basketball, Boxing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabadi, Kho-kho, Tae-kwomdo, Wushu(sanshou), Volleyball, Water Sports, Weightilifting, Wrestling போன்ற விளையாட்டு பிரிவுகளில் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 170 செ.மீட்டர் உயரமும், 80 செ.மீட்டர் மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: Medical Test, Trial Test உடல்தகுதி திறன் தேர்வுகள் அடிப்படையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்முறை: www.bsf.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
The Commandant, 95 Bn BSF, Bhondsi, Post-Office-Bhondsi, gram, Haryana - 122102.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com