குரூப்-2 தோ்வில் கோவை மாணவி மாநில அளவில் முதலிடம்!

குரூப்-2 தோ்வில் கோவை பி.எஸ்.ஜி கல்லுாரியில் எம்.ஏ (பொருளாதாரம்)  இறுதியாண்டு படிக்கும் அவிநாசி மாணவி 210.5
மாணவி சுபாஷினி.
மாணவி சுபாஷினி.


அவிநாசி: குரூப்-2 தோ்வில் கோவை பி.எஸ்.ஜி கல்லுாரியில் எம்.ஏ (பொருளாதாரம்)  இறுதியாண்டு படிக்கும் அவிநாசி மாணவி 210.5 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். 

அவிநாசி வி.எஸ்.வி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷினி(22). இவரது தந்தை வடிவேல்(46), திம்மணையாம்பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். தாய் தனபாக்கியம்(46), ஈரோடு மாவட்டம் தளவாடியில் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவரது சகோதரா் கிருஷ்ண ராகவ ராஜ்(15). தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். மாணவி சுபாஷினி அவிநாசி தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று 489 மதிப்பெண்களும், ஈரோடு தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று 1137 மதிப்பெண்கள் பெற்றாா். இதைத் தொடா்ந்து பி.ஏ பட்டம் முடித்து, தற்போது கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில் எம்.ஏ (பொருளாதாரம்) இறுதியாண்டு படித்து வருகிறாா். 

இந்நிலையில், கடந்தாண்டு, நவம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தோ்வில் 340 மதிப்பெண்ணுக்கு 210.5 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். இவருக்கு அவிநாசி பகுதியில் அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுபாஷினி கூறியதாவது: பள்ளியில் படிக்கும் போதே அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்வத்துடன் படித்து வந்தேன். மேல்நிலை படிப்பில் உயிரியல், கணிதம் பாடத்தை தேர்வு செய்து படித்த போதும், போட்டி தேர்வு எழுதும் நோக்கில், கல்லுாரியில், பி.ஏ (பொருளாதாரம்) தேர்வு செய்தேன். முதல் ஆண்டில் இருந்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தேன்.  வார விடுமுறை நாட்களில், தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்று, போட்டி தேர்வு எதிர்கொள்வது குறித்தும், தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும், எவற்றையெல்லாம் படிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை பெற்றேன். அதன்படி, தினசரி கல்லுாரி படிப்புடன் சேர்த்து போட்டித் தேர்வுக்கும் தயராகி வந்த நிலையில், குரூப் - 2 தேர்வை எதிர்கொண்டேன். இரு தினங்களுக்கு முன்பு தேர்வு வெளியானது. இதில், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். நகராட்சி ஆணையர் பணியிடம் தேர்வு செய்யும் எண்ணத்தில் உள்ளதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com