பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் தற்போது இந்தியா முழுவதும் IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய பணியிடங்களுக்கான புதிய
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!


 
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் தற்போது இந்தியா முழுவதும் IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  IT-Administrator    
வயதுவரம்பு: 21 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Professor    
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Faculty Research Associate    
வயதுவரம்பு: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம்,  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ibpsonline.ibps.in/ibpsafidec19 என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com