896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு-2019: UPSC வெளியீடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு-2019: UPSC வெளியீடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ் என 24 விதமான பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு 896 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வு: UPSC-Civil Services Examination in 2019

மொத்த காலியிடங்கள்: 896

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ளவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு எனும் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வான இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும். பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_CSPE_2019_N.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com