ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை வேண்டுமா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை வேண்டுமா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 798 காவலர், டைலர், காலனி தைப்பவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 798 காவலர், டைலர், காலனி தைப்பவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 798

பதவி: Constable (Water Carrier) - 452
பதவி:  Constable (Safaiwala)  - 199 
பதவி: Constable (Washer man)  - 49
பதவி: Constable (Barber) - 49

சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.


பதவி: Constable (Mail) - 07
பதவி: Tailor Gr.III - 20
பதவி: Cobber Gr.III - 22

சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடற் திறன் தேர்வு, துறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250

விண்ணப்பிக்கும் முறை: https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி, மார்ச் 2019 நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cpanc.rpfonlinereg.org/document/RPF032018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com