மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: ரயில்வேயில் அதிகபட்ச பணியிடங்கள்

மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆவணங்களில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசு துறைகளில் 32.38 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. இந்த வேலைவாய்ப்புகள் , 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி, 36.19 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 3.81 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்பட்டிருந்தன.
மத்திய அரசு துறைகளில் அதிகபட்சமாக ரயில்வே துறையில் 98,999 வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன. இதன்படி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12.7 லட்சமாக இருந்த ரயில்வே வேலைவாய்ப்புகள், 2019ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி 13.69 லட்சமாக அதிகரித்திருந்தது.
ரயில்வேக்கு அடுத்து காவல்துறையில் புதிதாக 80,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. மறைமுதக வரிகள் தொடர்பான துறைகளில் 53,000, நேரடி வரிகள் துறைகளில் 29,935 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு அமைச்சகத்தில் 46,347 வேலைவாய்ப்புகளும், அணுசக்தி துறையில் 46,347 வேலைவாய்ப்புகளும், மத்தியத் தொலைத் தொடர்பு துறையில் 2,250 வேலைவாய்ப்புகளும், நீர் வளம், நீர் மேலாண்மை துறையில் 3,981 வேலைவாய்ப்புகளும் கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 7,743, சுரங்க அமைச்சகத்தில் 6,338, விண்வெளித் துறையில் 2,920, மத்திய பணியாளர் நலன் குறைகள் தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையில் 2,056, வெளியுறவு துறையில் 1,833 வேலைவாய்ப்புகளும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன.
மத்திய கலாசார அமைச்சகத்தில் 3,647, வேளாண் துறையில் 1,835, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் 1,189 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பட்ஜெட் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com