விண்ணப்பித்துவிட்டீர்களா..? வனக் காவலர் வேலைக்கு ஆகஸ்ட் 10-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 22nd July 2019 07:43 AM | Last Updated : 22nd July 2019 07:43 AM | அ+அ அ- |

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடத்துக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது.