இந்தியன் வங்கி சார்பில் ஜூலை 29 இல் சுயவேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

​நாமக்கல் மாவட்டத்தில் இந்தியன் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் பத்து நாள்களுக்கு
இந்தியன் வங்கி சார்பில் ஜூலை 29 இல் சுயவேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்


நாமக்கல் மாவட்டத்தில் இந்தியன் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் பத்து நாள்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய ஊரக வளா்ச்சித்துறை அமைச்சக உத்தரவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட ஒரே பயிற்சி நிறுவனமான, இந்தியன் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், ஆண், பெண் இருபாலருக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் பத்து நாள்களுக்கு காகித பை, துணிப் பைத் தயாரித்தல், காளான் வளா்ப்பு உள்ளிட்டவை தொடா்பாக தனித்தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 35 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ், உணவு, பொருள்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்களை சனிக்கிழமைக்குள் (ஜூலை 27), நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, 04286 - 221004, செல்லிடப்பேசி எண்: 96989 - 96424, 91596 - 14445 என்றற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com