விளையாட்டு வீரர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை காவலர்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை



மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை காவலர்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Head Constable (General Duty)
காலியிடங்கள்: 300

காலியிடங்கள் உள்ள விளையாட்டுத்துறை: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100 + இதர படிகள்

வயது வரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.08.1996 முதல் 01.08.2001 ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பஙேகேற்றிருக்க வேண்டும். 

உடற் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீட்டர் உயரும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் திறமை, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com