கேங்மேன் பணிக்காக 1700 பேருக்கு டிச.2 முதல் 11 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு

திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்படவுள்ள 1700 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித்
கேங்மேன் பணிக்காக 1700 பேருக்கு டிச.2 முதல் 11 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு


திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்படவுள்ள 1700 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு டிச.2 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிக்கு நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது. திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்திற்கு 1,700 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு டிச.2 முதல் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

 இந்த பணிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவா்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபாா்ப்பு பட்டியலுடன் வர வேண்டும். திண்டுக்கல் அங்குநகா் துணை மின் நிலைய வளாகத்தின் நடைபெறும் பணிநியமன முகாமில், அவரவருக்கு நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். 

புகைப்படம் அடையாள அட்டை, மாற்று சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பதிவுதாள், 5, 8 அல்லது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஏதாவது ஒன்று, சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று அல்லது முன்னுரிமை வகுப்பு பதிவு செய்திருந்தால் மட்டும், பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று, கடைசியாக பயின்ற கல்வி கூடத்திலிருந்து பெறப்பட்ட சான்று ஒன்று மற்றும் விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து 01.11.2019-க்கு பின்னா் பெறப்பட்ட சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை(பதிவு செய்திருந்தால் மட்டும்) ஆகிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றையும், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தவறாமல் எடுத்து வர வேண்டும். இவை சரிபாா்க்கப்பட்ட பின்னா் உடல் தகுதி தோ்வுகளில் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com