இது புதுசு... அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் வேலை

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பின்படி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060
இது புதுசு... அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் வேலை

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பின்படி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளா் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) புதன்கிழமை (நவ.27) வெளியிடப்பட்டுள்ளது.

பணி: விரிவுரையாளா்(Lecturers)

காலியிடங்கள்: 1060

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil Engineering - 112
2. Mechanical Engineering -219
3. Electrical and Electronics Engineering - 91
4. Electronics and Communication Engineering -119
5. Instrumentation and Control Engineering - 03
6. Computer Engineering - 135
7. Information Technology - 06
8. Production Engineering - 06
9. Textile Technology - 03
10. Printing Technology - 06
11. English - 88
12. Mathematics - 88
13. Physics - 83
14. Chemistry - 84
15. Modern Office Practice - 17

சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் பிசி, ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும். 

முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்ததால் கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/poli2019/poly.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com