ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் காலியாக உள்ள 31 துணை மேலாளர், மூத்த
ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!


தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளையில் காலியாக உள்ள 31 துணை மேலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி: Deputy Manager (Dairying) - 01 
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
தகுதி: ஐடிடி, என்.டி.டி அல்லது பால் அறிவியல், பால்வளம் போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (DE) - 02 
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,,500
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட இரு பணிகளுக்கு வயதுவரம்பு கிடையாது. ஓசி பிரிவினர் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive (Lab) - 01 
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600
தகுதி: அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், அரசு வழங்கும் 2 ஆண்டு டிப்ளோமா இன் லேப் (டெக்னீசியன்) முடித்திருக்க வேண்டும். 

பணி: LVD - 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநராக குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Factory Assistant (SFA) - 24 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.07.2019 தேதியின்படி 30 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் 31 மதிப்பெண்களுக்கு வாய்மொழித் தேர்வும் நடத்தப்படும். அதில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.260-ம், மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை விழுப்புரத்தில் மாற்றத்தக்க வகையில் The General Manager, Villupuram -Cuddalore District Co -operative Milk Producers ’ Union L td ., Villupuram என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்ட எழுத வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Vellore – Thiruvannamalai District Co.Operative Milk Prodeucers Union Ltd., C-1325 No.142, Arcot Road, Sathuvachari, Vellore – 632 009
  
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com