ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டாளர், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை
ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா?



தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டாளர், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை இயக்குநர் (உடற்கல்வி), உதவி பேராசிரியர் மற்றும் உதவி பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 23

பணியிடம்: சென்னை

பணி: Controller of Examinations -01
பணி: Professor - 04
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200

பணி: Associate Professor - 05
பணி: Deputy Director (Physical Education) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100

பணி: Assistant Professor - 11
பணி: Assistant Engineer (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ. 57,700 -1,82,400

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம், பிஇ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250,  
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500  கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpesu.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai 600127.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpesu.org/appointment-25jan.html என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com