மத்திய அரசு நிறுவனத்தில் இயக்குநர் வேலை வேண்டுமா?

மத்திய அரசு நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (நிதி) பணியிடத்திற்கான புதிய
மத்திய அரசு நிறுவனத்தில் இயக்குநர் வேலை வேண்டுமா?



மத்திய அரசு நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (நிதி) பணியிடத்திற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: இயக்குநர் (நிதி)  - 01

தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ., பிஜிடிஎம், சிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:  45க்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ.1,80,000-3,40,000

பணியிடம்: புது தில்லி

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nalcoindia.com/wp-content/uploads/2020/02/Advertisement-for-DirectorFinance-NALCO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com