ரூ. 81 ஆயிரம் சம்பளத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை

எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள 317 துணை ஆய்வாளர், காவலர், மெக்கானிக், எலெக்டரீசியன் போன்ற குரூப் 'சி' பணியிடங்களை
ரூ. 81 ஆயிரம் சம்பளத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை



எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள 317 துணை ஆய்வாளர், காவலர், மெக்கானிக், எலெக்டரீசியன் போன்ற குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force(BSF)) 

மொத்த காலியிடங்கள்: 317

பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: SI (Master) - 05
பணி: Engine Driver - 09 
வயதுவரம்பு: 22 - 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Workshop - 03 
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: HC (Master) - 56 
பணி: HC (Engine Driver) - 68
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: HC (Workshop)  - 16
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
 
பணி: CT (Crew) - 160
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிக்கெட் வைத்திருப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மரைன் போன்ற துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியானத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com