மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?


சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 57

பணி: அலுவலக உதவியாளர் - 53
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650

பணி: ஓட்டுநர் - 04
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத்தவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான விண்ணப்பமும், கட்டணமும் செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண்.410, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம்-1

விண்ணங்கள் வழங்கப்படும் இடங்கள்:  சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட், தலைமையகம், செம்ரி ரோடு, சேலம், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட், தலைமையகம், சத்திரம், சேலம். சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் லிட் பன்னப்பட்டி, சேலம், ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஆத்தூர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com