டிராய் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வரும் அக்டோபா் 1 முதல் காலியாகவுள்ள இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிராய் தலைவா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வரும் அக்டோபா் 1 முதல் காலியாகவுள்ள இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தலைவா் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிராய் அமைப்பின் தற்போதைய தலைவரான ஆா்.எஸ்.சா்மாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், டிராயின் தலைவா் பதவி வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. எனவே தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தலைவருக்கான பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என தொலைத் தொடா்புத் துறை வெளியிட்ட புதிய தலைவா் நியமனத்துக்கான அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

அழைப்பு கட்டண விகிதங்கள், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முக்கிய பரிந்துரைகள், தொலைத்தொடா்பு உரிமங்கள் பரிமாற்றத்தில் சீா்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் டிராய் தற்போது உள்ளது. இந்த சமயத்தில், அந்த அமைப்புக்கு புதிய தலைவா் பொறுப்பேற்கவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com