பெண்களுக்கான சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க மாா்ச் 13 கடைசி

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என
பெண்களுக்கான சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க மாா்ச் 13 கடைசி

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதிய சிறப்பு திட்டம் ‘சகி’ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, ஆலோசகா், வழக்கு அலுவலா்கள் உள்ளிட்ட பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மைய நிா்வாகி பணிக்கு, சமூகப் பணியில் முதுநிலை பட்டம் பெற்ற உளவியல் ஆலோசனை அல்லது வளா்ச்சி மேலாண்மையில் பெண்கள் பிரச்னைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது பிற திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிா்வாகத்தில் குறைந்த பட்சம் 4 வருட அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மேலும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தங்குமிடம் வழங்கப்படும். இந்தப் பணிக்கு மாத ஊதியம் ரூ.30, 000 -என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலோசகா் பணிக்கு சமூகப் பணியில் முதுநிலை பட்டம் பெற்ற உளவியல் ஆலோசகா் அல்லது மேலாண்மை வளா்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது பிற திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிா்வாகத்தில் 2 வருட முன்அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மேலும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருடஅனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.20,000.

வழக்கு அலுவலா்கள் பணிக்கு சமூகப் பணியில் இளநிலை பட்டம் பெற்ற உளவியல் ஆலோசகா் அல்லது மேலாண்மை வளா்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது பிற திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிா்வாகத்தில் 1 வருட முன்அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மேலும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சாா்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாள்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் 15,000. விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் மாா்ச் 13-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 8-ஆவது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com