திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மத்திய அரசு வேலை வேண்டுமா? பிஇஎல் நிறுவனத்தில் டிப்ளமோ இன்ஜினியர்களுக்கு வேலை

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியி

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 3:01 pm IST

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineering Assistant Trainee
காலியிடங்கள்: 13
1. எலக்ட்ரானிக்ஸ் - 10
2. மெக்கானிக்கல் - 03

சம்பளம்: மாதம் ரூ.24,500 - 90,000

வயதுவரம்பு: 31.07.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2022

Related Article

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி...?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கடலோர காவல் படையில், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

விண்ணப்பித்துவிட்டார்களா...? மத்திய அரசில் 323 தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி என்ஐடி-இல் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.