கோமுக்தீஸ்வரர் ஆலயம்

சிவன், பார்வதிதேவியை பசுவாக போகும் படி சாபமிட்டார். பசு வடிவம் கொண்ட உமாதேவி, திருவாவடுதுறை காட்டில் மேய்ந்து அங்கிருந்த சிவலிங்கம் மீது பாலை சொரிந்தார். இதையடுத்து உமாதேவியின் பசு வடிவ சாபத்தை நீக்கிய சிவபெருமான், அந்தத் தலத்தில் பார்வதிதேவியை அணைத்தபடி எழுந்தருளினார். 'கோ'வாகிய பசுவிற்கு விமோட்சனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என பெயர் பெற்றது இத்தலம். கோவிலுக்கு செல்ல மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். படங்கள் உதவி: வசந்த்குமார்.
கோமுக்தீஸ்வரர் ஆலயம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com