விநாயகருக்கு கொழுக்கட்டை படையல்
By DIN | Published on : 14th September 2018 04:34 PM
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு நேற்று 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், அடிவாரத்திற்கும் உள்ள மாணிக்க விநாயகர் சந்நிதியில் கொழுக்கட்டை வைத்து நைவேத்யம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.