அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி லெய்க் நெல் பீட்டர் என்ற 22 வயது அழகி பட்டம் வென்றார். அவருக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால் கிரீடம் சூட்டினார். வடமேற்கு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ள இவருக்கு பெண்கள் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க தற்காப்பு மிக அவசியம் என்ற அவரின் பேச்சு வெற்றிக்கு பிரதானமாக இருந்தது. போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றினர்.