ஆசிய முதலீட்டு வங்கியின் புதிய கட்டடம் திறப்பு!

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி தலைமையகக் கட்டடம் அதாவது ஆசிய நிதி கட்டடத்தின் கட்டுமானப் பணி நிறைவு விழா, அக்டோபர் 24-ஆம் நாள் 10 மணிக்கு, பெய்ஜிங் மாநகரின் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பகுதியில் நடைபெற்றது. இக்கட்டடம், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் தலைமையகமாக விளங்குகிறது. பெய்ஜிங்கில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடம் சீனாவின் முதலாவது பல தரப்பு நிதி நிறுவனத்தின் தலைமையகம் ஆகும் . பெய்ஜிங் மாநகரின் சின்னமான நீர்கன சதுரம், பறவைக்கூடு போன்ற கட்டடங்களின் பக்கத்தில் இக்கட்டடம் அமைந்திருப்பது பெய்ஜிங்கிற்கு மேலும் அழகூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய முதலீட்டு வங்கியின் புதிய கட்டடம் திறப்பு!
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com