தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-ஆவது பொதுக்குழு, சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு விழாவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு தொடக்க விழாவும், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும், மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.