சுந்தர்.சி தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‘மீசையை முறுக்கு’. ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசை அமைத்துள்ள இந்த படத்தில் ஆத்மிகா, விக்னேஷ், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நன்றி தெரிவிக்கும் விதத்தில் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.