வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. - எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் - 6ஏ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை சுமந்துச் செல்லவுள்ள ஜி.எஸ்.எல்.வி. - எஃப்08 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் 12 ஆவது ராக்கெட்டாகும். இது ஏற்கெனவே விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் ஆகும்.