25. குடும்பம் ஒரு கோயில்

நாம், நம் குடும்பத்தாரோடு, நல்லபடியாக வசிப்பதற்காக வீடு வாங்கினோம். அந்த வீடு நாம் வாழ்வதற்காக,
25. குடும்பம் ஒரு கோயில்

நாம், நம் குடும்பத்தாரோடு, நல்லபடியாக வசிப்பதற்காக வீடு வாங்கினோம். அந்த வீடு நாம் வாழ்வதற்காக, வசிப்பதற்காக வீட்டில் வாழும் எல்லோரும், அதாவது, கணவனும், மனைவியும், பிள்ளைகளும், தன்னுடைய பெற்றோரும் அமைதியாக வாழ்வதற்காக வீட்டை வாங்கினோம்.

அந்த வீட்டில் அமைதியாக வாழ்கிறோமா? ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்கிறோமா? அடுத்தவர் நல்லபடியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோமா? அடுத்தவர் மீது பொறாமைப்படுகிறோமா? அடுத்தவர் வாழப் பிடிக்கவில்லையா? சண்டையிட்டுக் கொள்கிறோமா? நாமும் வாழ வேண்டும், மற்றவர்களும் சமாதானமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோமா? அடுத்தவரைப் பார்க்கும் போது முகத்தை திருப்பிக் கொள்கிறோமா? பெருமையாக நடந்து கொள்கிறோமா? ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறோமா. பணிவோடு நடந்து கொள்கிறோமா.

இந்த வீட்டை எனக்கு கொடுத்தது யார்? இறைவன் தான் நாம் வாழ்வதற்கு வீட்டைக் கொடுத்திருக்கிறான். குடும்பம் இல்லாதவர் யார்? ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீட்டைக் கொடுத்திருக்கிறான். குருவிக்கு, ஒரு காக்கைக்கு, ஒரு தேனீக்கு, சிலந்திக்கு இப்படி தான் படைத்த உயிரினங்கள், அனைத்துக்கும், இறைவன் தான் வீட்டைக் கொடுத்துள்ளான். எனக்குக் கிடைத்த இந்த வீட்டில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டாமா?

வீட்டில் வாழப் பிடிக்கவில்லை. வீட்டிற்கு போகப் பிடிக்கவில்லை, வீட்டில் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். அந்த வீட்டில் அமைதியைக் கெடுத்தது யார்? ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்க வேண்டாமா? பகை உணர்வு கொள்ளாமல், பரிவோடு, அடுத்தவருக்கு உபகாரம் செய்து வாழ்ந்து இருக்கலாம். ஆனால் உபத்திரம் அல்லவா மற்றவருக்கு செய்கிறோம்.

சரி, எனக்கு வீட்டிற்குப் போக பிடிக்கவில்லை என்று சொன்னால், காட்டிற்கு போகலாமா? காட்டில் வாழ முடியுமா? காட்டில், ஒரு மனிதனுக்கு தேவையானதை எல்லாம், அதாவது உணவு, உடை, வீடு எல்லாம் காட்டில் கிடைக்கிறது. ஆனால் அவன் வேறு யாருடனும் வாழக் கூடாது தனியாக அவன் மட்டும் வாழ வேண்டும், என்றால், வாழ முடியுமா? தனியாக, தான் மட்டும் காட்டில் வாழ வேண்டும் என்றால் பைத்தியமே பிடித்துவிடும். வாழ முடியாது.

மனிதன் சமுதாயமாக வாழும்படி இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறான். சமுதாயமாக நாட்டில் வாழும்போது ஒருத்தரையொருத்தர், முந்திக் கொண்டு போகலாமா, போட்டி போடலாமா. அடுத்தவரால் சிறு கஷ்டம் வந்தால் பொறுத்துக் கொள்ளக் கூடாதா. கோபம், சண்டை, மனஸ்தாபம் ஏற்படலாமா? ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தானே சமாதானமாக சமுதாயமாக வாழமுடியும். அடுத்தவருக்கு இடையூறு செய்து, அடுத்தவர் துன்பப்படுவதை விரும்பினால், அந்த சமுதாயம் என்னவாகும்.

வீட்டில் வாழும் கணவன், மனைவி விட்டுக் கொடுத்து வாழ வேண்டாமா. பொறுமை இல்லாமல் கோபப்படுகிறார்கள். விட்டுக் கொடுத்து வாழ வேண்டாமா. பொறுமை இல்லாமல் கோபப்படுகிறார்கள். கோபப்படும் போது குடல் வெந்து, குடல் கொதித்து துண்டு துண்டாகிவிடும். வயிற்றுவலி வருகிறது. சாப்பிடமுடியவில்லை. பசியில்லை. வயிறு வெந்துவிட்டது. கோபத்தில் வெந்து விட்டது. எதற்கு எடுத்தாலும் கணவன் மனைவிக்குள் கோபம். கணவர் வேண்டியதை எல்லாம் வாங்கித் தருகிறார். ஆனால் கோபப்படுகிறார். கோபப்படும் போது உடல் உறுப்புக்கள் எல்லாம் பாதிக்கப்படுகின்றன.

கணவனும், மனைவியும், உடல் நலம் சரியில்லை என்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் என்ன கஷ்டம் என்று கேட்டபோது மனைவி, ‘எனக்கு மயக்கமாக வருகிறது. அவ்வப்போது உடல் பலம் குன்றியதாக இருக்கிறது. வயிற்றுவலி இருக்கிறது சாப்பிட முடியவில்லை என்றார்.

உங்கள் கணவர் கோபப்படுவது குறைந்திருக்கிறதா என்று கேட்டேன். அவர் கோபப்படத்தான் செய்கிறார். கோபப்படுவது இன்னும் குறையவில்லை. அப்படிச் சொல்லும் போது பக்கத்தில் கணவர் இருந்தார். சொல்லி முடித்ததும் அழுதுவிட்டார்.

கணவருக்கும் 5 வருடங்களாக வயிற்றுவலி இருக்கிறது. 5 வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் கணவர், வயிற்று வலிக்காகத் தான் வந்தார். சென்னையில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ‘பேன்கிரியாடைடிஸ்’ அதாவது கணையத்தில் புண் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வயிற்றுவலி இப்படிப்பட்ட நோய் வந்தால் ஆங்கில மருத்துவத்தில் அதற்கு என்று குணப்படுத்த மருந்து கிடையாது. பல நாட்களாக உணவே சாப்பிட முடியாமல் வந்தார்.

அவருக்காக பிரார்த்தனை செய்தேன். இறைவனுக்கு பொருத்தமாக எப்படி வாழ வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து கொண்ட பிறகு வயிற்றுவலி குறைந்தது. நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரொம்பவும் மனைவியிடம் கோபப்படுவார் என்றால் கோபத்தை குறைக்க முடியவில்லை டாக்டர் என்பார். இப்போது எவ்வளவோ மாறிவிட்டார்.

கோபமானது எப்படி கணவனையும் மனைவியையும், நோயாளியாக மாற்றுகிறது என்று பாருங்கள். கோபம் நம்மை அழித்துவிடும். கோபப்படுவது பாவம். எவர் கோபப்படாமல் வாழ்கிறாரோ அவருக்கு நிச்சயமாக சொர்க்க வாழ்க்கை இருக்கிறது. கணவன் மனைவியாக இருந்தாலும் எவர் நல்ல குணத்தோடு இப்பூமியில் வாழ்கிறாரோ, அவருக்குத்தான், இறப்புக்குப் பின்பு சொர்க்க வாழ்க்கை. மனைவி நல்லவராக இருந்தால், சொர்க்கத்துக்குப் போய் இறைவனோடு வாழ்வார். கணவர் கோபப்படுவராக இருந்தால் நரகத்திற்குத்தான் போவார். இரண்டு பேரும் சேர்ந்து ஒரே இடத்திற்குப் போக முடியாது.

எனவே நன்மை செய்வதில், ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொள்ளுங்கள். நன்மை செய்வதில் போட்டி போடுங்கள். நிச்சயமாக அழகான வாழ்க்கையை இறைவன் வாக்களிக்கிறான்.

ஒருவருக்கொருவர், பொறுமையைக் கொண்டு உபதேசித்தல் வேண்டும். ஒருவருக்கொருவர் சத்தியத்தைக் கொண்டும், உண்மையக் கொண்டும் உபதேசம் செய்து கொள்ள வேண்டும்.

பெருமை. தன்னை மதிக்கவில்லையே என்ற பெருமை. அதனால் கோபம். கணவன் மனைவிக்கிடையில், தன்னை மதிக்கவில்லை என்பதால் கோபம் வருகிறது. தன்னை மதிக்காததால் கோபம் வருகிறதா. தன்னுடைய பெருமை போய் விட்டதா. பெருமையை காலில் போட்டு மிதியுங்கள். பொறுத்துக் கொள்ளுங்கள். பொறுமையோடு இருங்கள். பொறுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள். பெருமை கொள்பவரை இறைவன் நேசிப்பதில்லை. என்னுடைய பெருமை போய்விட்டதே. இவரோடு வாழ்வதால் எனக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. இறைவனுக்கு விரோதி, கெட்ட சக்தி, அந்த கெட்ட சைத்தான் தூண்டிவிடுகிறான்.

கணவன் மனைவியைப் பிரிப்பதே சைத்தானின் வேலை. கணவனும், மனைவியும், சைத்தானோடு பேசுகிறார்கள். இறைவனிடம் பேசுவதில்லை. இறைவனே, நான் பெருமை இல்லாதவனாக, பணிவு உள்ளவனாக வாழ வேண்டும். என்னை மன்னித்து, நல்ல குணத்தை அளிப்பவனே என்று இறைவனிடம் பணிய வேண்டும்.

ஒருவரையொருவர், மன்னித்து இரக்கம் கொண்டு உதவி செய்யுங்கள். இறைவன் உங்களை நேசிப்பான். நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். இறைவன் இருவரையும் சேர்த்து வைக்கவே நாடுகிறான். இறைவன் சேர்த்து வைத்ததை பிரித்துவிட வேண்டாம். கோபம் வந்து உடனே பிரித்து விட வேண்டாம். வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். பேசாமலும் இருங்கள். சிந்தித்துப் பாருங்கள். இறைவன் சேர்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவான். குடும்பம் ஒற்றுமையாக வாழ, சமுதாயம் ஒற்றுமையாக வாழ பொறுமை தேவை. நோய்கள் இல்லாமல் நல்வாழ்க்கை வாழ பொறுமை தேவை.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com