21. பிரார்த்தனைகள்

குணம் அடைய பிரார்த்தியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம். அவர் நோயிலிருந்து குணமடைந்து விட்டாரா என்று விசாரித்துக் கொள்கிறோம். நோயிலிருந்து குணமடைய எத்தனை நாள் ஆகும்?
21. பிரார்த்தனைகள்

குணம் அடைய பிரார்த்தியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம். அவர் நோயிலிருந்து குணமடைந்து விட்டாரா என்று விசாரித்துக் கொள்கிறோம். நோயிலிருந்து குணமடைய எத்தனை நாள் ஆகும்?

குணம் அடைய என்பதன் அர்த்தம், நான் நல்ல குணம் உள்ளவனாக மாற வேண்டும் என்று அர்த்தம். நல்ல குணம் இல்லாததால் நோய் வந்தது. குணம் அடைந்துவிட்டீர்களா? அதாவது நல்ல குணம் அடைந்துவிட்டீர்களா? எப்போது நல்ல குணம் அடைகிறோமோ அப்போது உடல் நலமடையும்.

புறம் பேசுவது கெட்ட குணம். ஒருவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி தவறாக அல்லது இழிவாக பேசுவது என்பது புறம் பேசுதல் ஆகும். எதற்காக அடுத்தவரை பற்றி பேசுகிறான். அவர் வாழ்வது இவருக்கு பிடிக்கவில்லை. அதாவது அவர் மேல் பொறாமை. அடுத்தவர் வாழ்வது இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவரைப்பற்றி இன்னொருவரிடம் தாழ்வாக பேசுகிறோம். இதன் மூலம் அவர் தாழ்ந்து விட வேண்டுமென்று விரும்புகிறோம். அடுத்தவரைப் பற்றி பல்வேறு கருத்துகளை கூறுகிறோம். அது உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். அடுத்தவரைப் பற்றி துருவித் துருவி விசாரணை செய்கிறோம்.

நாலுபேர் சிரித்துப் பேசுகிறார்கள் என்றால் அது பெரும்பாலும் அடுத்தவரைப் பற்றி பரிகாசம் செய்வதுதான். அடுத்தவரைப் பற்றி கிண்டல் செய்து பேசுவது பலருக்குப் பிடிக்கும். சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றாலே அடுத்தவரைப் பற்றி ஏதோ பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தம். அடுத்தவரைப் பற்றி பேசுவது எவ்வளவு தவறு என்று பெரும்பாலோர் உணர்வதில்லை. அடுத்தவரைப் பற்றி பேசுவதை நாம் நிறுத்திவிட்டால் பெரும்பாலும் பேச்சுக்கள் குறைந்துவிடும். பேசுவதற்கு விஷயம் இல்லாமல் போய்விடும்.

புறம் பேசுவது என்பது ஒரு எச்சில் பண்டத்தை சாப்பிடுவது போன்றதுதாஅன். ஒரு இறந்துபோன மனிதனின் உடலைப் புசிப்பது போன்றதுதான். அவ்வளவு இழிவானது. வெறுக்கத்தக்கது. யாரும் புறம் பேசி நாம் அதை காது கொடுத்துக் கேட்டால் அதுவும் தவறானதுதான். எவராவது புறம் பேச ஆரம்பித்தால் அதை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விட வேண்டும். அவரது பேச்சில் நாம் நாட்டம் இல்லாதவர் போன்று நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் புறம் பேசுவதை நிறுத்தி விடுவார்.

அடுத்தவரைப் பற்றி யாரும் பேசினால் அதைத் தருவித் துருவி விசாரிக்க வேண்டாம். அடுத்தவரைப் பற்றிய எண்ணத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அந்த தவறான எண்ணமே பாவமாகும். மனிதன் எல்லோருமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தாம். அடுத்தவரைப் பற்றித் தவறாக எண்ணுவதே குற்றம். அந்த எண்ணத்திற்கு நமக்கு தண்டனை விதிக்கப்படும். நமக்கு வரக்கூடிய பெரும்பாலான துன்பங்கள் வராமலே போய்விடும். நாம் அடுத்தவரைப் பற்றித் தவறாக நினைக்கும்போதே யாரைப் பற்றி பேசுகிறோமோ அவருக்கு அப்போதே நாம் அவரைப் பற்றித் தவறாகப் பேசுவது உணர்த்தப்பட்டு விடும். நம்மை பற்றி அவரும் தவறாக நினைக்க ஆரம்பித்துவிடுவார். நம்மைச் சுற்றி விரோதம் வளர்வதற்கு நாம் தான் காரணம். நம்முடைய பாவம் பாவங்களாக மாறூம். அது நம்மை சூழ்ந்து கொள்ளும்.

அடுத்தவரைப் பற்றி பேச்சு எழுந்தால் நாம் அவரைப் பற்றி நல்ல எண்ணம், அதாவது முடிந்தால், நல்ல எண்ணம் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மற்றவரைப் பற்றி தவறான எண்ணம் கொள்ளவே கூடாது.

நாம் அடுத்தவரைப் பரிகாசம் செய்கிறோம். ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். பரிகாசம் செய்யப்படுபவர் நம்மை விட மேலானவராக இருக்கலாம். நமக்குத் தெரியாது. யாரைப் பற்றி பரிகாசம் செய்கிறோமோ, அந்தப் பரிகாசமே வருங்காலத்தில் நம்மை சூழந்து கொள்ளும். பெண்களும் மற்ற பெண்களை பரிகாசம் செய்கிறார்கள். நாம் பரிகாசம் செய்தால் நாளை நாம் பரிகாசம் செய்யப்படும் நிலைக்கு ஆளாவோம். எல்லோருமே இறைவனுடைய படைப்புதான். எந்த ஒன்றையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அழகுதான்.

இறைவன் எல்லாவற்றையும் அழகாகத்தான் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றீலும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். தன்னிடம் என்ன சிறப்பான அறிவு இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

ஒருவர் மற்றவருக்கு பட்டப்பெயர் சூட்டுகிறார்கள். பட்டப் பெயர் சூட்டி கிண்டல் செய்வது மகா கெட்டதாகும். பரிகாசத்தின் மறுமக்கம் தான் பட்டம் சூட்டுவது. மனிதர்களைப் புகழவும் வேண்டாம். இழிவு படுத்தவும் வேண்டாம். யாரையும் பழிக்கவும் வேண்டாம்.

எப்போதும் புறம் பேசுகிறானோ அவன் விஷத்தை உண்டவன் போலாகின்றான். அவனே ஒரு விஷப் பொருளாகின்றான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தை விஷங்களாகின்றன. அதுதான் விஷமத்தனமான பேச்சு. புறம் பேசுபவனின் உடல் நலம் கெடுகிறது.

எப்போது நோய் வருகிறதோ அப்போது மனிதன் அடங்குவான். தான் செய்த தவறுகளை நினைத்துப் பார்ப்பான். நாம் அவரைப் பற்றி இழிவாகப் பேசி இருக்கக் கூடாதே என்று வருந்துவான். தன்னுடைய நிலைமை படுமோசமாக ஆகி இருப்பதை உணர்வான். தன் தவறை உணரும் போது நல்ல குணம் அடைகின்றான். பாவங்களுக்கு பரிகாரம் தான் நோய் வருவது. அதை அனுபவிக்க வேண்டியதுதான். ஒரு குறிப்பிட்ட காலத்தவணை உண்டு. அதுவரையில் அனுபவிக்க வேண்டியதுதான். காலத் தவணை எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இறைவழி மருத்துவம் என்பது மனிதர்களை இறைவன் பக்கம் திருப்புவதுதான்.

சேலத்திலிருந்து ஒரு பள்ளி மாணவனுக்கு உடல் நலம் சரியில்லை என்று போன் செய்தார்கள். அந்த மாணவனுக்கு ஜூரம் ஒரு வாரம் தொடர்ந்தது. எனவே சேலத்திலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். இரண்டு நாட்கள் மருத்துவமனை சிகிச்சை அங்கும் குணமாகவில்லை. ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் என்று வரவும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாணவனின் உடல்நிலை மிகவும் அபாய நிலையை அடைந்தது. ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்டது. நாடி சரியாகப் பார்க்க முடியவில்லை. அந்த பையனால் பேச முடியவில்லை. மயக்க நிலையை அடைந்துவிட்டான்.

எனவே அந்த மருத்துவமனை மருத்துவர் மருத்துவர் கோயம்புத்தூரிலுள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு கொண்டு போகும்படி சொல்லிவிட்டார். ஆம்புலன்ஸில் பையனை படுக்க வைத்துவிட்டு எனக்கு அந்த பையனின் தாயார் போன் செய்தார்கள்.

நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார். நான், நீங்கள் ஆம்புலஸில் ஏற்றிவிட்டு பிரார்த்தனை பண்ணச் சொன்னால் எப்படி என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

இறைவனால் குணப்படுத்த முடியாது. மருந்து, மாத்திரை, ஊசி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தால்தான் இறைவனால் காப்பாற்ற முடியுமா? இப்படி இறைவன் கூறியிருப்பானா? அவர்கள் இதயத்தில் இறை நம்பிக்கை இல்லை ஒரு சடங்குக்காக இறைவனே, கடவுளே என்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? அவர்கள் இறை பிரார்த்தனைக்கு தகுதியுள்ளவர்கள் இல்லை.

அந்த பையனது உறவினர், ஒருவர் இறை நம்பிக்கை உள்ளவர். அவர் குடும்பம் முழுவதும் இறைவழியில் மருந்து மாத்திரை இன்றி வாழ்பவர். அவர் என்னிடம் போனில் இந்த பையனின் தாய் இறை நம்பிக்கை உள்ளவர். தந்தைக்கு நம்பிக்கையில் உறுதி இல்லை. எனவே அந்த தாயாருக்காக பிரார்த்தனை செய்ய சொல்லி, பிரார்த்தனை செய்தேன்.

சில நிமிடங்கள் கழித்து அந்தத் தாயார், பையன் விழித்து பேசுகிறான். முகம் தெளிவாக இருக்கிறது. இப்போது ரத்த அழுத்தம், நாடியை பரிசோதிக்கச் சொன்னேன். எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறினார்.

அந்த மாணவன் இரண்டு தினங்களில் குணமாகிவிட்டான். நினைத்தால் சுகம். இதுதான் இறைவழி மருத்துவம்.

பெரிய கட்டிடங்கள், ஊசி, மருந்துகள், ஆபரேஷன் தியேட்டர், இவைகள் மனிதர்களுக்கு அழகாகக் காட்டப்படுகின்றன. அங்கே போய் தங்குபவர்களுக்குத் தான் தெரியும் மனிதன் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று அனுபவப்பட்டவர்கள் கூறுவார்கள்.

அந்த அனுபவம் வேண்டாம். இறைவன் பக்கம் திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com