23. உணவும் இறை உணர்வும்

எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. காரணம் ஜூரம். தாங்க முடியாத அளவுக்கு உடல்வேதனை.
23. உணவும் இறை உணர்வும்

எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. காரணம் ஜூரம். தாங்க முடியாத அளவுக்கு உடல்வேதனை. எந்த மருந்து மாத்திரை சாப்பிட்டும் சுகம் இல்லை. ஆங்கில மருத்துவம் செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கிறது. ஜூரம் என்றாலே ஆண்டிபயாடிக், மருந்துகள், வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண, அனால்ஜின், பாரசட்டமால் ஊசி, மாத்திரிகைகள் எதுவும் வேலை செய்யவில்லை. டாக்டருக்குப் படித்து எதுவும் செய்ய முடியாமல் போகிறது. கடைசியில் பப்பாளி பழத்திலிருந்தும், நிலவேம்பு மரத்திலிருந்தும் மருந்துகள் தயார் செய்து மருத்துவமனைகளில் கொடுக்கிறார்கள். நம் நாட்டு மருத்துவத்தை கேவலமாக நினைத்தார்கள். இப்போது எம் பி பி எஸ் படித்த, எம்.டி படித்த டாக்டர்களே மேற்கூறிய மருந்துகளை பரிந்துரை செய்கிறார்கள். எந்த மருத்துவமனையை எடுத்துக் கொண்டாலும், எழுபது சதவிகிதம் நோய்கள் ஜூரம் சம்பந்தப்பட்டதுதான். இருதய நோய், சிறுநீரக நோய், மூளை நரம்பு இவைகள் எல்லாம் தலா இரண்டு சதவிகிதம் தான். ஜூரம், சளி, இருமல் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை என்றால் மருத்துவமனையை இழுத்து மூட வேண்டியதுதான்.

இப்போது மருத்துவமனைகள் நம் நாட்டு மூலிகை மருந்துகளைக் கொண்டு தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

வருகிற ஜூரம் எல்லாம், மனித ரத்தத்திலுள்ள, பிளேட்லெட் அணுக்களை உடனடியாக குறைத்துவிடுகிறது. நோய் இல்லாத மனிதனுக்கு பிளேட்லட் எண்ணிக்கை லட்சத்து ஐம்பதாயிரம். இந்த எண்ணிக்கை ஜூரம் வந்தவுடன் கிட்டத்தட்ட பத்தாயிரம் அளவுக்கு குறைந்துவிடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் கசிந்து ரத்த குழாயிலிருந்து வெளியே வருகிறது. இதனால் இறப்பும் ஏற்படுகிறது. ஜூரம் வந்தவர்களுக்கு ரத்த அணுக்களை பாட்டில், பாட்டிலாக ஏற்றுகிறார்கள். நாலு மாத்திரை போட்டாலே ஜூரம் சரியாகப் போய்விடும் என்ற நிலை மாறி பெருங்கஷ்டத்திற்கு மனிதன் உள்ளாக்கப்பட்டுவிட்டான்.

இந்த கஷ்டத்திற்கு காரணமே ஆங்கில மருத்துவம் தான். இப்போது வாழும் மனிதர்கள் ஆங்கில மருந்துகளை பிறந்ததிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதனால், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைந்து போய்விட்டது. எனவே ஜூரம் வந்தவுடன் ரத்த அணுக்கள் சேதமடைகின்றன. உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதுதான் இன்றைய நிலைக்கு உண்மைக் காரணம்.

தாய்க்கும், குழந்தைக்கும் கொடுக்கக் கூடிய தடுப்பூசியும், சத்து மாத்திரைகளும் மனித உடலையே அழிக்க ஆரம்பித்து இருக்கின்றன.

அமெரிக்காவில், இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு வகுப்பிலும் பாடம் கற்பிக்கப்படுவதற்கு முன்பாக நர்ஸ் ஒருவர் அங்கே வகுப்பில் இருக்கும் குழந்தைகளில் அறுபது சதவிகிதம் பேருக்கு ஆன்டிசைக்காட்டிக் மாத்திரை கொடுத்தால் தான் வகுப்பை ஆசிரியர் நடத்த முடியும். இதற்குக் காரணம், பெரும்பாலான குழந்தைகள் பிறந்ததிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை ஐந்து வயதிற்குள் போட்டுக் கொள்வதுதான். அதனால் அந்தக் குழந்தைகளுடைய மூளை, நரம்பு எல்லாம் பாதிக்கப்படுகிறது.

ஆங்கில மருத்துவம், இன்றைய மனித சமுதாயத்தையே அழித்துக் கொண்டு இருக்கிறது. ஜூரம் காரணமாக, இன்று தினமும் தமிழகம் முழுவதும் எத்தனையோ பேர் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.

இறைவழி மருத்துவத்தில் ஜூரம் என்று வருபவர் யாருக்கும் எந்த மருந்தும் கொடுப்பதில்லை. வருகிறவர்களுக்கும், தொலைபேசியில் கேட்கிறவர்களுக்கும், பிரார்த்தனை தான். முற்றிலும் சுகமாவதை கேட்கிறோம். பார்க்கிறோம். இறைவனை யார் நம்புகிறார்களோ, அவர்களுக்கு எங்களுடைய, பிரார்த்தனை வேலை செய்கிறது. மருந்துகளை விட வேண்டும். இறைவனை நம்ப வேண்டும்.

எந்த உயிரினமும் மனிதன் உள்பட, உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளலாமே தவிர, எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளலாகாது. உணவைத் தவிர மருந்து என்று எதைச் சாப்பிட்டாலும் தீமைதான்.

கசப்பு என்று எதை வாயில் வைத்தாலும் மனிதனுக்கு பிடிக்காது. நாக்கு எதை அனுமதிக்கவில்லையோ, அதை வாய்வழியாக உண்ணக் கூடாது.

இறைவன் எதை வேண்டாமென்று உணர்த்துகிறானோ, அதை நீக்கி விடுவது நல்லது. நமது அறிவைக் கொண்டு இது உடம்புக்கு நல்லது என்று எதையும் உண்ணக்கூடாது. எது நாக்கிற்கு இனிமையாக, மனதுக்கும் நிறைவாக இருக்கிறதோ அதையே உண்ண வேண்டும்.

நாம் சாப்பிடும் ரசமும் புளிக்கக் கூடாது. அதில் புளிப்பு, காரம், உப்பு மூன்றும் சேர்ந்திருக்கிறது. ஆனால் ரசமாக உணவில் சேர்க்கும் போது அதில் புளிப்பு கூடாது. தயிர், அதிலும் புளிப்பு கூடாது. கசப்பான காய், உணவாக மாறும் போது சாப்பிடும்போது கசப்பு இல்லாமல் இருக்க வேண்டும். காயை அவித்து, நீரை நீக்கிவிட்டு, காரம், உப்பு சேர்த்து, பொரியலாக சாப்பிடவேண்டும். அது மிகவும் ருசியாக இருக்கும்.

தயிர் புளிப்பு தெரிந்தால், தண்ணீர் விட்டு பெருக்கி, மோராக்கி புளிப்பு இல்லாமல், உணவில் சேர்க்க வேண்டும். கசப்பு, புளிப்பு எல்லாம் உள்ளுறுப்புகளை பாதிக்கும்.

பழம் புளித்தாலும், தயிர் புளித்தாலும், எல்லாமே அமிலம் தான். அமிலம் உடலுக்கு ஆகாது.

மிதுக்கு வற்றல், அதை விருந்தின் போது இலையில் வைப்பார்கள். அதை தீய வறுத்து உப்பு போட்டுக் கொடுப்பார்கள். அதில் கசப்பே தெரியாது. உணவில், புளிப்பு, கசப்பு ருசி கூடாது.

மனத்தில் கசப்பு எண்ணங்கள் கூடாது. வாழ்க்கை கசந்துவிடும். வாழ்க்கை மணக்க வேண்டும். வாழ்க்கை தினமும் புதிதாக மலர வேண்டும். எண்ணத்தில் கசப்பு கூடாது. யாரைப்பற்றி காழ்ப்பு உணர்ச்சி, கசப்பு உணர்ச்சி கூடாது. அந்த விஷயம் பழமா? காயா? என்று கேட்கிறோம். நாம் பழத்தை, இனிமையானதே விரும்புகிறோம்.

கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அடுத்தவரிடம் பேசும் போது, அழகான வார்த்தைகளையே பேச வேண்டும். கனைத்து, உரத்தக் குரலில் பேசக்கூடாது. கத்திப் பேசுவது, கழுதையின் குரலுக்கு ஒப்பாகும்.

மனத்துக்கும், ருசிக்கும் சம்பந்தம் இருக்கிறது. ருசியான உணவு சாப்பிட்டால் மனத்துக்கு சமாதானம் கிடைக்கும். எத்தனை வருடம் ஆனாலும் அம்மாவை நினைக்கிறோம். காரணம். அம்மா சமைத்த உணவு அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த உணவு தான் அம்மாவை நினைவு படுத்துகிறது. ருசியான உணவில் மனது அமைதி அடைகிறது. நோயில்லாமல் வாழ ருசியான உணவு வேண்டும். உணவுக்கு ஒரு போதும் கஞ்சத்தனம் செய்யக் கூடாது. உணவுதான் வாழ்க்கை. தரமான உணவுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இது மலிவானது என்று எதையும் வாங்காமல், இது தரமானது ருசியானது, என்று எண்ணி வாங்க வேண்டும். தரங்கெட்ட உணவை சாப்பிடும் போது நாம் தாழ்ந்து வருகிறோம். நம் அறிவின் திறமும் குன்றிவிடுகிறது. உணவுக்கு ஒரு போதும் வஞ்சகம் செய்யக் கூடாது. தானும் உண்டு அடுத்தவருக்கும் உணவு வழங்க வேண்டும்.

இறைவனே உணவளிப்பவன். எவ்வளவு சிறப்பான உணவாக இருந்தாலும் அடுத்தவருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ண வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நாமும் உண்ண வேண்டும். நாம் முந்திக் கொள்ளக் கூடாது. பந்தியில் முந்தக் கூடாது. எல்லோருக்கும் வீட்டில் இருக்கிறதா என்று பார்த்து உணவை உண்ண வேண்டும்.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com