தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய அறுவை சிகிச்சை அரங்கைப் பார்வையிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய அறுவை சிகிச்சை அரங்கைப் பார்வையிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நுழைவாயில், ரூ.1.3 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அறுவைச் சிகிச்சை மையம் ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நுழைவு வாயில், சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
ஆசியாவிலேயே சிறந்ததான எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை 837 படுக்கைகள் கொண்டது. இதில் கூடுதலாக 40 படுக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை மையம் இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் திறக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் பயோமெட்ரிக் முறை நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாயின் விரல் ரேகையை அந்தக் கருவியில் வைத்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும் பெட்டி திறக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை வளாகங்களுக்கு வெளியே இருக்கும் தள்ளுவண்டிக் கடைகளில் விற்கும் சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் தொடர்பாக மாநகராட்சி வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சடலங்களில் முறைகேடு: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் சடலங்கள் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நவீன பிணவறைகள் அமைக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. சென்னை, கோவை அரசு மருத்துவமனைகளிலும் மேம்படுத்தப்பட்ட பிணவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com